டெல்லியில் காற்று மாசு அபாயம் : ஊழியர்கள் வீட்டில் இருந்த பணியாற்ற உத்தரவு 

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் மாசு அடைந்து, அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. இதனால் பணியாளர்கள் 50 சதவிகிதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் காற்று மாசு அபாயம் : ஊழியர்கள் வீட்டில் இருந்த பணியாற்ற உத்தரவு 
Air pollution threat in Delhi

காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.) 6 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது.

101 முதல் 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151 முதல் 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 301 முதல் 500 வரை இருந்தால் மிகவும் அபாயகரமானதாகும்.

டெல்லியில் நேற்று நிலவரப்படி காற்று மாசு அளவு 450 புள்ளிகளாக இருந்தது. கடந்த சில வாரங்களாக இதே நிலை நீடிக்கிறது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கடந்த சில நாட்களாக ஆபத்தான அளவிற்கு உயர்ந்து வருகிறது. எகியூஐ அளவீடுகள் அபாய வரம்பை தொடர்ந்து தொட்டுள்ளதால் பொது சுகாதாரத்தை பாதுகாக்க அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள டெல்லி அரசு கட்டாயப்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களின் மொத்த பணியாளர்களில் 50 சதவீத பேர் மட்டுமே நேரடியாக அலுவலகத்திற்கு வரவேண்டும். மீதமுள்ள ஊழியர்கள் கட்டாயம் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் இதனை மிக கடுமையாக பின்பற்ற வேண்டும் என்பதோடு அவசர பணிகள் அல்லது பொது பயன்பாடு சேவைகள் மேற்கொள்ள வேண்டிய சூழலில் மட்டுமே கூடுதல் பணியாளர்களை நேரடியாக அழைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக தனியார் நிறுவனங்களும் தங்களின் தளவாட மற்றும் நிர்வாக மையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிநேரங்களை கட்டம் கட்டமாக மாற்றி அமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow