ஆந்திரா, தெலங்கானா, பீகாரில் நாளை மக்களவைத் தேர்தல்... களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள் யார்?

நாடு முழுவதும் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில், நாளை (மே 13) மொத்தம் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

May 12, 2024 - 07:12
ஆந்திரா, தெலங்கானா, பீகாரில் நாளை மக்களவைத் தேர்தல்... களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள் யார்?

நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் 3 கட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. 4-ம் கட்ட தேர்தல் நாளை (மே 13) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடைபெற்று வந்த தேர்தல் பரப்புரைகள் நேற்று (மே 11) நிறைவடைந்தது. நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 9 மாநிலங்களில் மொத்தம் 96 தொகுதிகளில் நடைபெறுகிறது. 

அதன்படி ஆந்திரா, ஒடிசா, பீகார், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய 9 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதில், ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுடன் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஒடிஸாவில் முதல் கட்டமாக 4 மக்களவைத் தொகுதிகளுடன் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடக்கிறது. தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13, மகாராஷ்டிரத்தில் 11, மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 8, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, ஜாா்க்கண்டில் 4 தொகுதிகளுக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 

நான்காம் கட்டத் தோ்தலில், மத்திய அமைச்சா்கள் கிரிராஜ் சிங் (பெகுசராய்), அா்ஜுன் முண்டா (குந்தி), சமாஜவாதி கட்சித் தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் (கன்னௌஜ்), முன்னாள் கிரிக்கெட் வீரா் யூசஃப் பதான் (பஹரம்பூா்), காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி (பஹரம்பூா்), ஆந்திர மாநில முதல்வரின் தங்கை ஒய்.எஸ்.சா்மிளா (கடப்பா), எம்.பி. பதவி பறிக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா (கிருஷ்ணாநகா்), நடிகா் சத்ருகன் சின்ஹா (அசன்சோல்), நடிகை மாதவி லதா (ஹைதராபாத்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாக களம் காண்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow