“அஜித்தும் விஜய் சேதுபதியும் நாங்க கேட்டதை விட அதிகமா பண்ணாங்க..” இதுதானா அந்த விஷயம்!

மகாராஜா படத்தின் சக்சஸ் மீட்டில் அஜித், விஜய் சேதுபதி இருவரையும் சினிமா செய்தியாளர்கள் பாராட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது.

Jun 19, 2024 - 20:21
“அஜித்தும் விஜய் சேதுபதியும் நாங்க கேட்டதை விட அதிகமா பண்ணாங்க..” இதுதானா அந்த விஷயம்!

சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸானது. நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ள இந்தப் படத்தை கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேக்கிங், திரைக்கதை, விஜய் சேதுபதியின் ஆக்டிங் என அனைத்திலும் மகாராஜா மாஸ் காட்டுவதாக பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சொல்லி அடித்துள்ளது மகாராஜா. அதன்படி இந்தப் படம் இதுவரை 40 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், மகாராஜா படத்தின் சக்சஸ் மீட் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, இயக்குநர் நித்திலன் சாமிநாதன், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது மகாராஜா உருவானது குறித்தும் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் மனம் திறந்தனர். முக்கியமாக மகாராஜா படத்தின் வெற்றிக்கு இயக்குநர் நித்திலன் சாமிநாதன் தான் காரணம் என விஜய் சேதுபதி பாராட்டினார். அதேபோல், தனது முந்தைய படங்கள் சரியாக போகாததால் விஜய் சேதுபதிக்கு இனி பேனர் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் படமாக மகாராஜா அமைந்துள்ளது. அதற்கு காரணமான நித்திலன் சாமிநாதனுக்கும் தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள் எனக் கூறினார். இதனையடுத்து சினிமா செய்தியாளர்கள் சங்க செயலாளர் பேசிய போது, அஜித்தையும் விஜய் சேதுபதியையும் மனம் திறந்து பாராட்டினார். அதாவது கொரோனா பரவல் அதிகமாக இருந்த போது எல்லா நடிகர்களும் உதவி செய்தனர். ஆனால், அஜித்தும் விஜய் சேதுபதியும் நாங்க கேட்டதை விட ரொம்ப அதிகமா உதவி செய்தனர். அதேபோல், சினிமா செய்தியாளர்கள் சங்கத்திற்கும் நாங்கள் எதிர்பார்த்ததை விட விஜய் சேதுபதி அதிகமாகவே உதவினார். இந்த நல்ல மனதுக்காகவே மகாராஜா வெற்றிப் படமாக மகுடம் சூட்டியுள்ளது என நெகிழ்ச்சியாக பேசினார். 

ஏற்கனவே அஜித்தின் உதவும் மனபான்மை குறித்து ஏராளமான செய்திகள் வெளியாகி உள்ளன. தனது வீட்டில் வேலை பார்த்தவர்கள் முதல் தன்னுடன் நடித்தவர்கள், தனது படங்களில் பணிபுரிந்தவர்கள் என யாராக இருந்தாலும், அவர்களுக்கு கஷ்டம் என்றால் கர்ணனாக மாறிவிடுவார் அஜித். அதே ரூட்டில் கொரோனா காலத்தில் சினிமா செய்தியாளர்களுக்கும் அஜித் உதவியுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மற்ற நடிகர்களை விடவும் அஜித்தும் விஜய் சேதுபதியும் அதிகமாக உதவி செய்துள்ள இந்த செய்தியை அவர்களது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow