இஸ்ரேல் மீது US பொருளாதாரத் தடை... எச்சரிக்கை விடுத்த ஈரான் முதல்அடி..! நிலைகுலைந்து நிற்கும் இஸ்ரேல்...
இஸ்ரேல் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஈரானின் கடும் எச்சரிக்கைக்குப்பின் இஸ்ரேலில் ஹிஸ்புல்லா குழு ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காசாவுக்கு ஈரான் ஆதரவளித்து வந்த நிலையில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ஜனவரி 19ம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் முக்கிய போர் தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஏப்ரல் 13ம் தேதி இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் நடத்தியது. இதனால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டதாகவும் அஞ்சப்பட்டது. அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேலின் தாக்குதலை தடுத்த போதும், அணுகுண்டு போர் உள்ளிட்ட காரணங்களால், ஈரான் மீது நேரடித் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஈரான் மீது தாக்குதல் நடத்த, செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பயன்படுத்திய தனது போர் கப்பலையும், வான் ஆயுதங்களையும் அமெரிக்கா கொடுத்து உதவியது. ஹமாசுக்கு எதிரான போரிலும் அமெரிக்கா உதவியுடன் காசாவில் இஸ்ரேல் முன்னதாக தாக்குதலை தீவிரப்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இஸ்ரேல் படையால் கைது செய்யப்பட்ட பாலஸ்தீன - அமெரிக்க நபரான உமர் ஆசாத், உறைபனியில் சிக்கி, இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதன் எதிரொலியாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, தங்களது பாதுகாப்புப் படை மீது பொருளாதாரத் தடை விதிக்க நினைத்தால், முழு பலத்துடன் எதிர்த்துப் போராடுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஏதேனும் தவறுதலாக முடிவெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்கக் கூடும் என ஏற்கனவே ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஈரானின் நிதியால் இயங்கும் லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு, வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தின் மீது 35 ராக்கெட்டுகளால் தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு லெபனான் கிராமங்களில் இஸ்ரேலியப் படையின் ஊடுருவலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஹமாஸ் அமைப்பால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக்கைதிகள் 133 பேரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, பிரதமர் நேதன்யாகுவை எதிர்த்து இஸ்ரேலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் யேல் உள்ளிட்ட புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும் வலுவடைந்துள்ள போராட்டத்தால் அரசு நிலைகுலைந்துள்ளது.
இவ்வாறாக அமெரிக்காவின் திடீர் எதிர்ப்பு, ஈரானின் தாக்குதல், சொந்த நாட்டு மக்களின் எதிர்ப்பு உள்ளிட்டவற்றால் நிலைகுலைந்துள்ள இஸ்ரேலின் அடுத்த கட்ட நடவடிக்கை கேள்விக்குறியாக உள்ளதாக, சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?