தஞ்சாவூர்: இளைஞர்கள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Dec 2, 2023 - 12:34
Dec 2, 2023 - 16:36
தஞ்சாவூர்: இளைஞர்கள் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம

தஞ்சாவூரில் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து தடையை மீறி ஆர்பாட்டம் நடத்திய இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இஸ்லாமிய  ஜமாத் கூட்டமைப்பு மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் நிர்வாகி பரீத் தலைமையில் கூட்டமைப்பு நிர்வாகிகள் இஸ்மாயில், அப்துல்ரகுமான் முன்னிலையில் 50 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சோழபுரம் கடைத்தெருவில் திரண்டு சோழபுரத்தைச் சேர்ந்த அசோக்ராஜ் மற்றும் முகம்மது அனாஸ் ஆகியோரது கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து, அவர்களது குடும்பத்திற்கு இழப்பீடும், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்திற்க்கு போலீசார் அனுமதி  மறுத்தனர். அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக், காவல் ஆய்வாளர் சர்மிளா மற்றும் போலீசார் தடுத்ததால், போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.இதனால் அந்தப் பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow