குடும்ப ஆட்சிக்கு பிப்-27.ம் தேதி லேகிய மருந்து இருக்கு! - அண்ணாமலை கடும் தாக்கு!..

Feb 22, 2024 - 21:55
குடும்ப ஆட்சிக்கு பிப்-27.ம் தேதி லேகிய மருந்து இருக்கு! - அண்ணாமலை கடும் தாக்கு!..

தமிழகத்தில் நடைபெற்று வரும் குடும்ப ஆட்சிக்கு வரும் 27ஆம் தேதி லேகிய மருந்து கொடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

என் மண், என் மக்கள் என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை வரும் 27ஆம் தேதி திருப்பூர் பல்லடத்தில் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில், என் மண், என் மக்கள் யாத்திரை கோவை, சிங்காநல்லூரில் இன்று (22.02.2024) நடைபெற்றது. யாத்திரையை தொடர்ந்து நடத்தப்பட்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, இந்த யாத்திரை மக்களுக்கான யாத்திரை என்றார். லேகியம் விற்பதை போல சுற்றுவதாக சிலர் விமர்சிக்கின்றனர். வரும் 27ஆம் தேதி பெரிய பாட்டிலில் லேகியம் விற்கப்போகிறோம் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டை பிடித்துள்ள பீடைக்கெல்லாம் அந்த லேகியம் தான் மருந்து என விமர்சித்த அவர், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு அந்த லேகியம் தான் மருந்து என கூறினார். மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம் ஒரு பெயர் வைப்பதற்கு எதற்கு பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என சாடிய அண்ணாமலை, திமுக மீண்டும் ஆட்சிக்கு வர விடவே மாட்டேன் என அக்கட்சியின் தொண்டர்களே தயாராக இருப்பதாக கூறினார்.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வை ஷ்ணவ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow