காசா இனப்படுகொலை - நினைத்துப்பார்க்க முடியாத விலையை கொடுக்கத் தயாராகுங்கள் : பிரியங்கா காந்தி
இனப்படுகொலையை தண்டனையின்றி நடத்தப்படுவதால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இரக்கமற்ற படுகொலைக்கு உள்ளாகின்றனர்.
"காசா பகுதியில் நடத்தப்படும் இனப்படுகொலையை உலகம் முழுதும் பார்த்துக்கொண்டு அமைதியாகவும், ஒட்டுமொத்த தேசமும் உதவிக்காக கெஞ்சும்போது யாரும் நுழையக்கூட முடியாதது வேதனையளிக்கிறது" என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் படை இஸ்ரேஸ் இடையே போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்.7ஆம் தேதி ஹமாஸ் படை இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 250க்கும் மேற்பட்டோரை பணையக்கைதிகளாக பிடித்து சென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, இஸ்ரேல் தாக்குதலால் 12,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 29,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், "காசாவில் மருத்துமனைகள் மீது குண்டுவெடிப்பு சம்பவங்கள் மற்றும் மருத்துவர்களுக்கு எதிரான சித்ரவதை சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. மேலும் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நிதி மற்றும் ஆயுதங்கள் வழங்குவது கவலை அளிக்கிறது. அக்.7ஆம் தேதி தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடக்கும் போர் காசா பகுதியில் பலரை நெருக்கடிக்கு இட்டுச்சென்றுள்ளது." என தெரிவித்துள்ளார்.
"காசா விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் அமையும், அனுமதியும் மிகப்பெரிய அவமானம் மட்டுமல்லாமல் மனித இனத்திற்கு திருப்புமுனையாக வரலாற்றில் பதிவு செய்யப்படும். காசா பகுதியில் நடத்தப்படும் இனப்படுகொலையை உலகம் முழுதும் பார்த்துக்கொண்டு அமைதியாகவும், ஒட்டுமொத்த தேசமும் உதவிக்காக கெஞ்சும் போது யாரும் நுழையக்கூட முடியாதது வேதனையளிக்கிறது. மேலும் இந்த இனப்படுகொலையால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இரக்கமற்ற படுகொலைக்கு உள்ளாகின்றனர்."எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு மற்றும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் மேலும் பலர் இறக்க காரணமாகின்றன. இதற்கு எதிராக குரல் எழுப்பாவிட்டால், அதற்காக அனைவரும் நினைக்க முடியாத விலையை கொடுக்க வேண்டியிருக்கும்" என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். "நீதி மற்றும் மனிதாபிமானம், சர்வதேச ஒழுங்குமுறை என அனைத்து விதிகளும் உடைக்கப்பட்டு விட்டன... மனிதநேயம் மறைந்துவிட்டது... இதற்கு எதிராக நாம் குரல் எழுப்பாத போது, ஒவ்வொருவரும் ஒரு நாள் இதற்காக நினைத்துப் பார்க்க முடியாத விலையைக்கொடுக்க வேண்டி இருக்கும்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?