வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரி.. சென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

May 14, 2024 - 13:08
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரி.. சென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் மருத்துவர் பழனி. இவர் தற்போது சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீடு சென்னை நொளம்பூர் டாக்டர் குருசாமி சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது.

மருத்துவர் பழனி மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் நொளம்பூரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் 8 போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழனியின் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வரும் போலீசார், வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துகள் குறித்தும், அதன் மதிப்பு குறித்த தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow