"தேவார பாட சாலைக்கு வேறு இடம் பார்க்கலாம்"... மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்திற்கு தனி நீதிபதி உத்தரவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் லட்டு தயார் செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் உத்தரவிட்டுள்ளனர்.

May 15, 2024 - 19:41
"தேவார பாட சாலைக்கு வேறு இடம் பார்க்கலாம்"... மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்திற்கு தனி நீதிபதி உத்தரவு

மதுரை ஆதீனம் சார்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி விதியில் திருஞான சம்பந்தர் மண்டபம் உள்ளது. அதில் ஆதீனத்தின் சார்பாக திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவ சித்தாந்த பாடல்கள் ஓதுவார்கள் மூலமாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால், 292-வது அருணகிரிநாதர் ஆதீனம் சன்னிதானமாக இருந்த காலத்தில் இவை நிறுத்தப்பட்டன. 

இதனால் அந்த இடத்தில் எந்நிகழ்வும் நடத்தப்படாத நிலையில், அதில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு தயார் செய்யும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்த மண்டபத்தில் தேவார பாடசாலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், லட்டு தயாரிக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு ஏற்கனவே தனிநீதிபதியிடம் விசாரணைக்கு வந்த போது, கோவில் நிர்வாகம் லட்டு தயார் செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு  இடமாற்றம் செய்ய வேண்டும். திருஞானசம்மந்தர் மண்டபத்தில் மதுரை ஆதீனம் பாடசாலை நடத்த இடமளிக்க வேண்டும் என்றும்,  என்று உத்தரவிட்டார். இதனை எதிர்த்து மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் லட்டு தயார் செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், மதுரை ஆதினம் பாடசாலை நடத்த கோவிலுக்குள் வேறு இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து மதுரை ஆதினம் சார்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow