திருவேற்காட்டில் வெள்ள நீர் வடித்த பகுதிகளில் அமைச்சர் எம்.ஆர்.கே ஆய்வு
ஒரு சில இடங்களில் உள்ள சகதிகளை அப்புறப்படுத்த கூறிய அமைச்சர் உடனடியாக பீச்சிங் பவுடர் தூவி சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருவேற்காடு நகராட்சியில் வெள்ள நீர் வடித்த பகுதிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையில் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட வேலப்பன்சாவடி,நூம்பல் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்கள் மூலம் இரவு பகலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், அதனை வேளாண்மை உழவர் நலம் அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், திமுக மத்திய மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசருடன் இணைந்து ஆய்வு செய்தார்.
பாதிக்கப்பட்டு மீட்புகுள்ளாகும் பகுதிகளுக்கு நேரடியாக சென்ற அமைச்சர் அங்குள்ள மக்களிடம் குறைக்களை கேட்டறிந்தார். மேலும் ஒரு சில இடங்களில் உள்ள சகதிகளை அப்புறப்படுத்த கூறிய அமைச்சர் உடனடியாக பீச்சிங் பவுடர் தூவி சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வுகளின் போது மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன்,நகரமன்ற தலைவர் என்.இ.கே மூர்த்தி உட்பட பலர் உடனிருந்தனர்.
What's Your Reaction?