பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவசர டெல்லி பயணம். அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார்
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்க உள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று அவசரமாக டெல்லி பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
இந்த டெல்லி பயணத்தின் போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜ.க. மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பைஜயிந்த் பாண்டா ஆகியோரை சந்திக்க உள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க. சார்பில் குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, கூட்டணி நிலவரம், தேர்தல் பணிகள், வியூகங்கள் குறித்து அமித்ஷா, ஜே.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. உள்பட சில சிறு கட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகள் நிலை இன்னும் தெரியாமல் உள்ளது. இந்த கட்சிகளையும் பாஜக கூட்டணியில் கொண்டு வருவது தொடர்பாகவும் நயினார் நாகேந்திரன் டெல்லி பயணத்தின் போது ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
What's Your Reaction?

