குளியல் சோப் 5% துணி சோப் 18% என்னங்க இது : ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் சோப் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
துணி வைக்கும் சோப்புகளுக்கு விதிக்கப்படும் 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என சோப் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சோப் தயாரிக்கும் சிறிய உற்பத்தியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாக குழு தேர்வுசெய்யப்பட்டது. தலைவராக கே.தனபால், துணை தலைவராக செல்வம், செயலாளராக அண்ணாதுரை, பொருளாளராக செந்தில்குமார் உள்பட 21 நிர்வாகிகள் புதிகாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த புதிய நிர்வாக குழு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கும். 400 உறுப்பினர்களின் ஒப்புதலோடு புதிய நிர்வாக குழு தேர்தல் இன்றி முழு மனதோடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய நிர்வாகு குழு சார்பில் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரி தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளது. குளியல் சோப்பிற்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் மத்திய அரசு, அதே துணி துவைக்கும் சோப்பிற்கு 18 சதவிகிதம் வரி விதிக்கிறது.
அதனால், துணி துவைக்கும் சோப்பிற்கும் 5 சதவிகிதமாக வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி உள்ளனர்.
What's Your Reaction?

