அம்பாசமுத்திரம்: குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த கரடிகள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் பெண் ஒருவர் அதிகாலையில் கரடியால் தாக்கப்பபட்டார்.

Jan 9, 2024 - 14:25
Jan 9, 2024 - 23:25
அம்பாசமுத்திரம்: குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த கரடிகள்

அம்பாசமுத்திரம் அருகே கோட்டைவிளைபட்டி குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கரடியால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மேற்குத்தொடர்ச்சி மலையில் சிறுத்தை, யானை, கரடி உள்பட ஏராளமான வனவிலங்குள் உள்ளன.இவை அவ்வப்போது மலை அடிவாரத்திலுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியும் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றது.

 கடந்த சில நாட்களாக இரண்டு கரடி  கோட்டைவிளைப்பட்டியில் வைகுண்டம் என்பவர் வீட்டு மதில் சுவர் பகுதியில் இரவு நேரங்களில் கரடி உலா வரும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.கரடி அந்த பகுதியில் சுற்றி திரியும் வீடியோ வைகுண்டம் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இரவு நேரங்களில் சுற்றி திரியும் கரடியால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் கை கட்டி வேடிக்கை பார்க்கும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் பெண் ஒருவர் அதிகாலையில் கரடியால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow