திருவாரூரில் குறைவான அளவில் பேருந்துகள் இயக்கம்- பயணிகள் அவதி
மாவட்டத்தில் சராசரியாக 50% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் பணிமனையில் இருந்து வழக்கமாக 67 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று போராட்டத்தின் காரணமாக 30 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.இது குறித்து தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், இன்று திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
அண்ணா தொழிற்சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த பணியை புறக்கணித்த நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பணியாளர்களால் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் பணிமனையில் இருந்து 30% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து 40% பேருந்துகளும், மன்னார்குடியிலிருந்து 40 % பேருந்துகளும் இயக்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியில் இருந்து 70% பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் மொத்தமாக மாவட்டத்தில் சராசரியாக 50% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பணிக்கு செல்வோர், தொலைதூரம் பயணிப்போர் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காலையில் இருந்து போலீஸ் பேருந்து பணிமனைகள் முன்பு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?