பறவைக்காய்ச்சல் எதிரொலி.. கேரள - தமிழக எல்லை மாவட்டங்களில் தடை !

பறவைக்காய்ச்சல் எதிரொலியாக கேரளாவில் இருந்து கோழி, வாத்து போன்றவற்றை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Apr 23, 2024 - 12:05
பறவைக்காய்ச்சல் எதிரொலி.. கேரள - தமிழக எல்லை மாவட்டங்களில் தடை !

கேரளாவில் பறவைக்காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாமக்கலில் நோய் தடுப்புப் பணிகளை கண்காணிக்க 47 அதிவிரைவுப்படை அமைப்பு, இருமாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இறைச்சிக்காக கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கோழி, வாத்து உள்ளிட்டவற்றுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலத்தின் 6 மாவட்டங்களில் 26 சோதனைச்சாவடிகள் அமைத்து அதிகாரிகள் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பாக கண்காணிப்பு மையங்கள் அமைப்பட்டுள்ளதாக அத்துறையின் முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா ஐ.ஏ.எஸ் அறிவித்துள்ளார். குறிப்பாக கோவையில் 12 மையங்கள், நீலகிரியில் 8 மையங்களை அமைத்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சோதனைச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow