பரபரப்பான சென்னை சென்ட்ரலில் கிடந்த இளம் பெண் சடலம் ! கொலையா? தற்கொலையா? என போலீஸ் விசாரணை !

தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ரயில்நிலையம் என்பதால், பெண்ணின் உடல் மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Apr 23, 2024 - 11:51
பரபரப்பான சென்னை சென்ட்ரலில் கிடந்த இளம் பெண் சடலம் !  கொலையா? தற்கொலையா? என போலீஸ் விசாரணை !

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஓய்வு அறையில் இளம் பெண் துணியால் தூக்கிட்ட படி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எப்போதும் மக்கள் கூட்டமாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஓய்வு அறை அருகே சுமார் 26 வயதுடைய இளம்பெண் துணியால் கழுத்தை இருக்கி, இரும்பு ஸ்டேன்டில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் பெண் இறந்து கிடந்த இடத்தில் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன. அதனையும் அதனுடன் இருந்த தடயங்களையும் போலீசார் சேகரித்தனர்.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ரயில்நிலையம் என்பதால், பெண்ணின் உடல் மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதேவேளையில், இது கொலையா? தற்கொலையா? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow