குளச்சல் அருகே பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல்-நிபுணர்கள் சோதனை 

மிரட்டல் கடிதம் விடுத்தவரை கண்டுபிடிக்க போலீசார் சைபர் க்ரைம் போலீசின் உதவியிடன் விசாரணை எடுத்து வருகின்ற

Jan 9, 2024 - 14:40
Jan 9, 2024 - 23:30
குளச்சல் அருகே பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல்-நிபுணர்கள் சோதனை 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஜும்மா பெரிய பள்ளி வாசலுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்த நிலையில் வதந்தி என தெரிய வந்த நிலையில் அனுப்பியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஜூம்மா பள்ளி வாசல் உள்ளது.பள்ளி வாசலுக்கு வந்த சாதாரண  கடிதத்தை தபால் ஊழியர் கொடுத்து விட்டு சென்றார்.கடிதத்தை பள்ளி நிர்வாகி பிரித்து பார்த்ததில் அதில்,அனுப்புனர் முகவரியில் புவியூர் அரிகிருஷ்ணன் என இருந்தது.கடிதத்தில் உங்கள் மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல் என எழுதியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளி வாசல் நிர்வாகிகள் குளச்சல் ஏ.எஸ்.பி.பிரவின் கெளதம் புகார் செய்தனர்.ஏ.எஸ்.பி. பிரவின் கெளதம் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி வாசல் முழுவதும் வெடிக்குண்டு கண்டுபிடிக்கும் கருவிகளுடன் சோதனை நடத்தினர்.

சோதனையில் எதுவும் சிக்கவில்லை.மோப்பநாயும் பள்ளிவாசல் வளாகத்தினுள் மோப்பம் பிடித்தது.ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மேற் குறிப்பிட்ட முகவரியில் அரிகிருஷ்ணன் பெயரில் எவருமில்லை என தெரிய வந்தது.இந்த மிரட்டல் கடிதம் விடுத்தவரை கண்டுபிடிக்க போலீசார் சைபர் க்ரைம் போலீசின் உதவியிடன் விசாரணை எடுத்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow