தொழிலதிபரிடம் பணம், நகை பறிப்பு : டிவி நடிகை தலைமறைவு : போலீஸ் வலைவீச்சு
கரூர் தொழிலதிபரிடம் பணத்தை ஏமாற்றிய டிவி நடிகை தலைமறைவாகி உள்ளார். இவரை பிடிக்க அம்மாவட்ட போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
நடிகை ராணி. ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். இவரது தந்தை சினிமாவில் இருந்ததால், தனது சிறு வயதிலேயே 50க்கும் அதிகமான தெலுங்குப் படங்களில் சைல்டு ஆர்டிஸ்டாக நடித்துள்ளார் ராணி. அதன் பிறகு படிப்பை முடித்து திருமணம் செய்துகொண்டார்.
பல வருடங்களுக்கு பிறகு தெலுங்கு சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். தமிழில் சிகரம் என்ற தொடர் மூலம் தான் அறிமுகமானார். சிகரம், அலைகள், சொந்தம், அத்திப் பூக்கள், வள்ளி போன்ற தொடர்களில் வில்லி கேரக்டரில் நடித்த பிரபலம் ஆனவர்.
நடிகை ராணி கரூர் ஹோட்டல் அதிபர் ஒருவருடன் சமீபகாலமாக நெருங்கி பழகிவந்துள்ளார். அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை நடிகை ராணி வாங்கியுள்ளார். பல மாதங்கள் கடந்த நிலையில், ராணி பணம் மற்றும் நகையை திருப்பி தரசொல்லி தொழிலதிபர் வலியுறுத்தி உள்ளார்.
ஆனால் ராணி திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளார். இதை தொடர்ந்து, கரூர் காவல்நிலையத்தில் நடிகை ராணி மீது தொழிலதிபர் புகார் தெரிவித்தார். இந்த புகாரை விசாரிக்க கரூர் போலீசார் நடிகை ராணியை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது, அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரது இல்லத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்த முயன்றனர்.
ஆனால் ராணியின் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதன் பிறகே ராணி தலைமறைவானது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் நடிகை ராணி கரூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

