எளிய மக்களின் வளர்ச்சி.. 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சி... அமைச்சர் ஏ.கே.சிங் புகழாரம்

Apr 15, 2024 - 12:15
எளிய மக்களின் வளர்ச்சி.. 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சி... அமைச்சர் ஏ.கே.சிங் புகழாரம்

நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு கொண்டிருப்பவர் பிரதமர் மோடி என  மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசினார்.

நாகப்பட்டிணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ் கோவிந்த்தை ஆதரித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த பரப்புரை கூட்டத்தில், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துறை மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பெங்கேற்றார்.

கூட்டத்தில் பேசிய அவர், “இந்தியாவில் பெண்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், ஏழை எளிய மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திரமோடி தன்னை அர்ப்பணித்துக்கொண்டு பாடுபட்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. 

மோடி தலைமையிலான நல்லாட்சி தொடர்ந்திட நாகை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ்கோவிந்த்க்கு தாமரை சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க உறுதி ஏற்கவேண்டும் என்று பேசி வாக்கு சேகரித்தார் அமைச்சர் வி.கே. சிங்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow