கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சிஎஸ்கே... மைதானத்தை அதிரவைத்த மஞ்சள் கடல்...

Apr 9, 2024 - 08:13
கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சிஎஸ்கே... மைதானத்தை அதிரவைத்த மஞ்சள் கடல்...

ஐ.பி.எல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் போட்டியில், கொல்கத்தா அணியை வீழ்த்தி, சென்னை அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி இருக்கிறது.

தொடரின் 22 லீக் போட்டி நேற்று(08-04-2024) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் ருதுராஜ் தலைமையில் நடப்பு சேம்ப்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் தலைமையில் முன்னாள் சேம்ப்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் நிரம்பி வழிந்தார்கள், அவர்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற டிசர்ட்-ஐ பார்த்தால், இது மைதானமா, இல்லை மஞ்சள் கடலா என்று கேட்கும் அளவிற்கு கூட்டம் இருந்தது.

ஐபிஎல் தொடர்களில் இதுவரை இரு அணிகளும் 28 முறை மோதியுள்ளன. அவற்றில் 18 போட்டிகளில் சிஎஸ்கே அணியும், 10 போட்டிகளில் கேகேஆர் அணியும் வெற்றி பெற்றன. அதனால் நேற்று நடைபெற்ற போட்டி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

சிஎஸ்கே இதற்கு முன் நடந்த 4 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில், டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 137 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி, 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

கடந்த இரண்டு போட்டிகளில் களமிறங்காத தோனி, இந்த போட்டியில் களம் இறங்கினார். அப்போது ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினர். 

சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கடசிவரை ஆட்டமிழக்காமல் 67 ரன்களைக் குவித்து, நடப்பு தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜா 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். போட்டியின் முடிவில் ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow