சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று மாமன்றக்கூட்டம் !

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெறுகிறது. வார்டுகளின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Jan 31, 2024 - 10:30
Jan 31, 2024 - 10:32
சென்னை மேயர் பிரியா  தலைமையில் இன்று மாமன்றக்கூட்டம் !

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் தலைமையில்  நடைபெறுகிறது. வார்டுகளின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய சென்னை மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியுள்ளது. இதில் 35 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட உள்ளது எனவும்  இதில் முக்கிய தீர்மானங்கள் விவரம் பின்வருமாறு:

1. பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய கணக்கு  குழுமம் 2022 2023 ஆம் ஆண்டு தற்காலிக ஊதியம் மற்றும் சிறப்பு தற்காலிக மிக ஊதியம் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு நடைமுறை ப்படுத்த மாமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது இதில் வரு வழங்கப்படும் மிகை ஊதியம் சிறப்பு மிகை ஊதியத்தால் மாநகராட்சி க்கு  2023 24 ஆம் ஆண்டுக்கு நிதியாண்டில் ஏற்படும் கூடுதல் செலவினமாக மூன்று கோடியே 70 லட்சம் ரூபாயாக கணக்கிடப்படுகிறது மொத்தம் 7970 பணியாளர்களுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது .

2. சென்னை மாநகராசி மண்டலம்-2 ஒன்று முதல் 15 வரை உள்ள (NULM) தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் பணி புரியக்கூடிய பணியாளர்களுக்கு 522 ரூபாயிலிருந்து நாள் ஊதியம் 687 ஆக உயர்த்தி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது அதன்படி ஒன்று முதல் 15 மண்டலத்தில் 4469 பேர் பணிபுரிந்து வருவதாகவும் தகவல் கிடைக்க பெற்றுள்ளது .

3. சென்னை மாநகராட்சி 11 வார்டு முதல் 48வது வார்டு வரை உள்ள மாநகராட்சி பள்ளிகள் மற்றும்  அரசு பள்ளிகள் சுற்றுப்புறமும் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் ஆகிய சுத்தம் செய்ய 110 பணியாளர்களை தற்காலிகமாக தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பணியமர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

4. சென்னை மாநகராட்சி சார்பில் உள்ள டென்னிஸ் , பூப்பந்து , டேபிள் டென்னிஸ் ,மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு திடல்களை பராமரிக்க வேண்டியுள்ளது அதன் அடிப்படையில் ஆன்லைன் E டெண்டர் முறையில் ஒப்பந்தம் கூறுவதற்கு 32 டென்னிஸ் திரள்கள் 23 பூப்பந்து திடல்கள் 18 ஸ்கேட்டிங் திடல்கள் மற்றும் இரண்டு டேபிள் டென்னிஸ்களுக்கு மாமன்ற தீர்மானம் பெறப்பட்டது புதிதாக திறக்கப்பட்ட திடல்களுக்கு நிர்வாக அனுமதியும் மற்றும் மன்றத்தின் அனுமதி பெற்று வரை வரையறுக்கப்பட்ட  மின்னணு ஒப்பந்த முறையில் ஒப்பந்தம் கோருவதற்கும் அனுமதி தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. மேலும் மொத்தமாக 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என தகவல்  வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow