மனித மூளையில் நியுராலிங் சிப்..மருத்துவத்தில் மைல் கல் பதித்த எலன் மஸ்க் !

மருத்துவத்தில் மைல் கல் பதித்த எலன் மஸ்க். பக்கவாதம் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்களின் மூளைக்குள் நியுராலிங் சிப்பை பொருத்தி, பாதிப்பிலிருந்து மீட்க எலான் மஸ்க் நியுராலிங் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மேலும் முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Jan 31, 2024 - 11:59
மனித மூளையில் நியுராலிங் சிப்..மருத்துவத்தில் மைல் கல் பதித்த எலன் மஸ்க் !

மருத்துவத்தில் மைல் கல் பதித்த எலன் மஸ்க். பக்கவாதம் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்களின் மூளைக்குள் நியுராலிங் சிப்பை பொருத்தி, பாதிப்பிலிருந்து மீட்க எலான் மஸ்க் நியுராலிங் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மேலும்  முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகம்  தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் இன்னும் சில பல பெரிய நோய்களுக்கு மருந்து இல்லாமல் மக்கள் இறக்கவும், பல நாள் நோய்வாய்ப்பட்டு இறக்கவும் நேருகிறது. அந்த வகையில் பக்கவாத நோய் முழுமையாக குணமடைய பல வருடங்கள் கூட ஆகலாம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் தொழில்நுட்பத்தின் முன்னோடியாக திகழும் எலன் மஸ்க்கின்  நியுராலிங் நிறுவனம் மனித மூளையில் நியுராலிங் சிப் ஓன்றை பொருத்தி முதன் முறையாக வெற்றியும் கண்டுள்ளதாக அறிவித்துள்ளார் எலன் மஸ்க். மருத்துவத்துறையில் பெரும் சவாலான  அறுவை சிகிச்சை மனித மூளை அறுவை சிகிச்சை ஆகும். இந்த நியுராலிங் சிப் , பெரும் சவாலான நோய்களுக்கு தீர்வாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனம் செவ்வாயன்று, முடக்குவாத நோயாளிகளை மையமாகக் கொண்ட ஆறு வருட ஆய்வில் மூளையில் சிப் பொருத்தி பரிசோதிப்பதற்காக நோயாளிகளை ஆட்சேர்ப்பு செய்யத் தொடங்க ஒப்புதல் பெற்றதாக அறிவித்திருந்தது.

அதனைத்தொடர்ந்து எலோன் மஸ்க் X தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்து முதல் மனித நோயாளி விரைவில் நியூராலிங்க் கருவியைப் பெறுவார் என்று பதிவிட்டுள்ளார். முழு உடல் இயக்கத்தை மீட்டெடுக்கும் திறன் கொண்டது மைக்ரோ சிப் என தெரிவித்தார். மேலும் எலன் மஸ்க் இரண்டு படிகள் மேலே சென்று ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு இந்த சிகிச்சை கிடைத்து இருந்தால் கற்பனை செய்து பாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது நியூராலிங்கின் முதல் தயாரிப்பின் பெயர் டெலிபதி என எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த டெலிபதி உபகரணமானது எண்ணங்கள் மூலம் தொலைபேசி மற்றும் கணினியை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கை, கால் போன்ற உறுப்புகளை இழந்தவர்களின் பயன்பாட்டுக்காக இந்த உபகரணம் வழங்கப்படும் என்றும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங்கால் வேகமாகத் தொடர்பு கொள்ள முடிந்திருந்தால் எப்படி இருக்கும். அதை சாத்தியமாக்குவது தான் எங்களின் இலக்கு என்றும் எலன்  மஸ்க் தெரிவித்துள்ளார்.

மேலும் அதன் தொடர்ச்சியாக ஏற்கெனவே மஸ்க் நியூராலிங் பற்றி பேசியபோது மனித மண்டைக்குள் ஒரு ஃபிட்பிட் உபகரணம் போல் நியூராலிங் சிப் செயல்படும் எனவும் மூளை செயல்பாட்டை தூண்டிவிடும். இதன் மூலம் ஆட்டிசம் பாதித்தோர் மற்றும் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த நியுராலிங் சிப் மூலம்  பலனடையலாம் என எலன் மஸ்க் தெரிவித்தார்.
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow