கார் சேற்றில் சிக்கியதால் போலீசிடம் சிக்கிய கொள்ளையர்கள்

கார் சேற்றி சிக்கியதால் கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Dec 20, 2023 - 13:26
Dec 20, 2023 - 19:01
கார் சேற்றில் சிக்கியதால் போலீசிடம் சிக்கிய கொள்ளையர்கள்

நன்னிலம் அருகே ஆயுதங்களுடன் காரில் தப்பி வந்த 5 கொள்ளையர்கள் கார் சேற்றில் சிக்கியதால் காவல்துறையினரிடம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேளாங்கண்ணியில் உள்ள துணிக்கடை ஒன்றில் மதுரையைச் சேர்ந்த 5 பேர் துணிவாங்க சென்றுள்ளனர். துணியின் விலையை கேட்டு எங்க ஊரில் இந்த விலை ரூ.50 ஆனால் நீ ரூ.150க்கு விற்கிறாயா? என கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து கடைக்காரர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் மதுரை பகுதியைச்சேர்ந்த 5 பேரும்   வேளாங்கண்ணியில் தனியார் விடுதியில் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஸ் சிங் உத்தரவின்பேரில் காவல்துறையினர் கொள்ளையினரை பிடிக்க சென்றனர்.
 
இந்த நிலையில் அந்தக் கொள்ளையர்கள்  காரில் வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர் மார்க்கமாக தப்பித்து வந்துள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் இணைந்து அந்த காரை விரட்டி வந்துள்ளனர்.அப்போது நன்னிலம் அருகே  காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக பணங்குடி என்ற பகுதியில் உள்ள அக்ரஹாரம் தெருவில் காரை ஓட்டி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கொள்ளையர்கள் சென்ற கார் சேற்றில் சிக்கி நின்றுள்ளது.பின்னால் துரத்தி வந்த காவல்துறையினர் காரை வழிமறித்துள்ளனர்.அப்பொழுது தப்பி ஓடிய  கொள்ளையர்களில்  நான்கு பேரை பிடித்துள்ளனர்.ஒருவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.மேலும் காரை சோதனையிட்ட  காவல்துறையினர் காரில் இருந்த கத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் பிடிப்பட்ட கொள்ளையர்களை  காவல்துறையினர் கைது செய்து நாகப்பட்டினம் கொண்டு சென்றுள்ளனர்.தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதன் பேரில் காரில் தப்பி சென்ற கொள்ளையர்கள் மதுரை சேர்ந்த கண்ணன், பக்ருதீன், அஸ்வின், பாண்டியன் மற்றும் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow