ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய  வழக்கு-சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம் காவல் துறையினரின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Dec 26, 2023 - 15:06
ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய  வழக்கு-சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய  வழக்கில் புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் விடுதலை செய்யப்பட்டதை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில்  போக்குவரத்து மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கல்யாண சுந்தரம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாததால், தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை நடத்திய பத்தாம் வகுப்பு தேர்வில் தனித் தேர்வராக அவர் பங்கேற்றார்.

அப்போது இந்த ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதிய விவகாரம் தொடர்பன வழக்கை விசாரித்த திண்டிவனம் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து கல்யாணசுந்தரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், அவரை விடுதலை செய்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார்.இந்த வழக்கில்  தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விழுப்புரம் காவல் துறையினரின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். கல்யாணசுந்தரம் தற்போது புதுவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow