தொடர் விடுமுறை: சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல்
கிறிஸ்மஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையை கொண்டாட, சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஏற்காட்டில் இதமான சீதோஷ்ணம் நிலவியதால் சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருந்ததால், தங்கும் விடுதிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்கள் விறுவிறுப்பாக நடந்தது. ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்வதற்காக, நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட இடங்களிலிருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா, சூட்டிங்மட்டம் ஆகிய பகுதிகளை சுற்றுலா பயணிகள் குவிந்து வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகள் வாகனங்களால் நகரின் முக்கிய சாலைகளான கூடலூர்-ஊட்டி சாலை, குன்னூர்-ஊட்டி சாலை, பூங்கா சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மேலும், உணவு விடுதிகள், ஓட்டல்களில் மதிய நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புறநகர் பகுதிகளில் சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு உணவு மற்றும் பல்வேறு தேவைகளுக்காக அதிகளவு சுற்றுலா பயணிகள் பகல் நேரங்களில் வரும் போது, கமர்சியல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கொடைக்கானலில் களைகட்டும் உறை பனி சீசனை அனுபவிக்கவும், தொடர் விடுமுறையை கொண்டாடவும் சுற்றுலாப்பயணிகள் குவிந்த வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி வாகனங்கள் 5 கிமீ தூரம் வரை அணிவகுத்து நின்றன.`மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் இங்கு, தற்போது கடும் உறைபனி சீசன் நிலவுகிறது. நட்சத்திர ஏரி புல்வெளி, பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, பியர் சோழா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகளளவில் காணப்படுகிறது.
What's Your Reaction?

