மக்களவை எதிர்க்கட்சித் தலைவரானார் ராகுல் காந்தி... நாடாளுமன்றத்தில் இனிதான் சம்பவமே இருக்கு!
எதிர்க்கட்சிகளின் பலம் அதிகமாக இருப்பதால், மக்கள் விரோத திட்டங்களை பாஜக செயல்படுத்த விரும்பினால் அதை முடக்க இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. மக்களவையில் எதிர்க்கட்சிகளை வழிநடத்த சரியான நபர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒருமனதாக தெரிவித்தனர்.
டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி 234 இடங்களை பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. காங்கிரஸ் மட்டும் 99 இடங்களில் வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சிகளின் பலம் அதிகமாக இருப்பதால், மக்கள் விரோத திட்டங்களை பாஜக செயல்படுத்த விரும்பினால் அதை முடக்க இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. மக்களவையில் எதிர்க்கட்சிகளை வழிநடத்த சரியான நபர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒருமனதாக தெரிவித்தனர்.
ஆனால் ராகுல் காந்தி இந்த பதவியை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து வந்தார். ஆனாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவரிடம் பேசி வந்தனர். இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தது.
இதில் மக்களவையில் இந்தியா கூட்டணி எப்படி செயல்பட வேண்டும்?, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், '' மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி தலைவர்களின் ஒருமித்த கருத்து இதுதான்'' என்று கூறியுள்ளார்.
What's Your Reaction?