தேய்பிறை பஞ்சமி.. தீராத கடன்.. வழக்கு பிரச்சினை தீர வாராஹியை இன்று வழிபடுங்கள்

மனிதர்கள் நோய் பயமின்றியும் எதிரிகள் தொல்லையின்றியும், வம்பு வழக்குகள் எதுவும் இன்றி வாழ்வதே வசந்தம்தான். வாராஹி அன்னையை வழிபடுபவர்களுக்கு நோய், எதிரி, கடன், வம்பு வழக்குகள் பிரச்சினை எதுவும் இருக்காது.

Jun 26, 2024 - 06:37
தேய்பிறை பஞ்சமி..  தீராத கடன்..  வழக்கு பிரச்சினை தீர வாராஹியை இன்று வழிபடுங்கள்

 தேய்பிறை பஞ்சமி திதி (ஜூன் 26)புதன்கிழமை வருவது சிறப்பு. இந்த நாளில் வாராஹி தேவியை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும் விரோதிகள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத ஆபத்துகளும், விபத்துக்களும் விலகி ஓடும், தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் நோய்கள் குணமாகும். செய்வினை கோளாறுகள் நீங்கும். வாராஹி அன்னையை வழிபடுவர்களுக்கு வாக்கு பலிதம் ஏற்படும், எதிரிகள் ஓடி ஒளிவார்கள், விரோதிகள் நண்பர்களாவர், 

வாராஹி அன்னையை வழிபடுவர்களுக்கு வாக்கு பலிதம் ஏற்படும், எதிரிகள் ஓடி ஒளிவார்கள், விரோதிகள் நண்பர்களாவர், செய்வினை மாந்திரிக தோஷங்கள் அகலும், தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும். நெடுநாள் நோய்கள் குணமாக தொடங்கும். தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும். எதிர்பாரா விபத்துக்கள், ஆபத்துகள் ஏற்படாமல் காப்பாள் அன்னை வாராஹி. 

ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அன்னை வாராஹி.  வாராஹி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவியாகவும் விளங்குகிறாள். வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். இதனால் தன வசியம் ஏற்படும் தொழில் விருத்தியாகும் வியாபாரம் செழிக்கும்.

வாராஹி அன்னையை வழிபடுவர்களுக்கு வாக்கு பலிதம் ஏற்படும், எதிரிகள் ஓடி ஒளிவார்கள், விரோதிகள் நண்பர்களாவர், செய்வினை மாந்திரிக தோஷங்கள் அகலும், தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும். நெடுநாள் நோய்கள் குணமாக தொடங்கும். தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும். எதிர்பாரா விபத்துக்கள், ஆபத்துகள் ஏற்படாமல் காப்பாள் அன்னை வாராஹி.  வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.

அன்னைக்கு பிடித்த நிறம் நீலம், கருப்பு, பவள நிறம், நீல சங்குப் பூக்களும், கருந்துளசி, வில்வமும் அன்னைக்கு ஏற்றது.  இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் வீட்டிலேயே வாராஹியை நினைத்து வழிபடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எருமைத்தயிர். தேன் கலந்த மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை அன்னைக்கு பிடித்தமானது.

வாராஹிதேவிக்கு இஞ்சி பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை நைவேத்தியம் செய்யலாம் நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் பிடித்தமானது. மிளகும் ஜீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும் ஏலக்காயும் லவங்கமும் பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாக படைக்கலாம். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்து படைக்கலாம்.

உலகை அழிவில் இருந்து மீட்டவளாகக் கருதப்படுகிறாள். பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு வருபவள் வாராஹி. எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள். வாராஹி அம்மனை எந்த நாளில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. 

ஞாயிறு கிழமைகளில் வாராஹியை வழிபட்டால் நோய்கள் தீரும். திங்கட்கிழமைகளில் வழிபட்டால் மன நல பாதிப்புகள் நீங்கும். வீடு நிலம் தொடர்பான பிரச்சினைகள்தீர செவ்வாய்கிழமைகளில் வாராஹியை வழிபடலாம். கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை வழிபடலாம். குழந்தை பேறு கிடைக்க வியாழக்கிழமை வழிபடலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் வியாழக்கிழமை வழிபடலாம். வெள்ளிக்கிழமை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow