Coolie: லோகேஷுடன் மீண்டும் இணையும் ஸ்ருதிஹாசன்..? ரஜினியின் கூலியில் இப்படியொரு சர்ப்ரைஸ்ஸா?

ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகும் கூலி படத்தில் ஸ்ருதிஹாசனும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Coolie: லோகேஷுடன் மீண்டும் இணையும் ஸ்ருதிஹாசன்..? ரஜினியின் கூலியில் இப்படியொரு சர்ப்ரைஸ்ஸா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்ததை அடுத்து, துபாய், அபுதாபி டூர் சென்றிருந்தார் ரஜினி. அதன்பின்னர் இமயமலைக்கும் ஆன்மீகப் பயணம் சென்று  வந்தார். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 10ம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் கூலி படத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளது மட்டும் இதுவரை உறுதியாக தெரியவந்துள்ளது.

கூலி படத்தில் ரஜினியின் நண்பனாக சத்யராஜ் நடிக்கவிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தப் படத்தில் மலையாள ஹீரோ திலீப் இணைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சத்யராஜ், திலீப் இருவரும் கூலி படத்தில் நடிப்பது குறித்து இதுவரை அபிஸியலாக அப்டேட் வெளியாகவில்லை. அதற்குள்ளாக இன்னொரு பிரபலமும் கூலி படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனும் லோகேஷின் கூலியில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ், முதன்முறையாக இனிமேல் என்ற ஆல்பத்தில் நடித்திருந்தார். குறிப்பாக ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக லோகேஷ் நடித்திருந்ததும், இருவரும் உருகி உருகி ரொமான்ஸ் செய்திருந்ததும் ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது. இதனை வைத்து லோகேஷும் ஸ்ருதியும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வந்தனர். ஆனாலும் அதனை கண்டுகொள்ளாமல் கூலி படத்தில் ஸ்ருதிஹாசனை கமிட் செய்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

அதேபோல், கூலி படத்தில் ரஜினியின் மகள் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஜூன் 10ம் தேதி சென்னையில் தொடங்கும் கூலி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில், ரஜினி, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மூவரும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி முதல் ஷெட்யூலில் ரஜினி, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் காட்சிகளை ஷூட் செய்ய லோகேஷ் பிளான் செய்துள்ளாராம். அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிமேல் ஆல்பம் தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜ்ஜும் ஸ்ருதி ஹாசனும் மீண்டும் இணையவிருப்பது நெட்டிசன்களுக்கு தரமான கன்டென்ட்டாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow