ராமதாசுக்கு திமுக தந்த ரூ.110 கோடி : சிங்கப்பூரில் கைமாறிய பணம் : பாமக எம்எல்ஏ சொன்ன சீக்ரெட்
பாமகவை பிளவுப்படுத்த டாக்டர் ராமதாசு திமுகவிடம் இருந்து 110 கோடி ரூபாய் வாங்கியிருப்பதாக அக்கட்சியின் எம்எல்ஏ சதாசிவம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 29-ம் தேதி சேலத்தில் ராமதாசு தரப்பு செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவராக ராமதாசு தேர்வு செய்யப்பட்டார். அன்புமணி அவரது செளமியா ஆகியோர் பதவி நீக்கம் செய்யும் தீர்மானமும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சின்ன பையன்களை வைத்து கொண்டு அன்புமணி தன்னை கொச்சைப்படுத்துவதாக ராமதாசு கண்ணீர் மல்க பேசியிருந்தார். இது அன்புமணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், ராமதாசு மீது அன்புமணி தரப்பு எம்எல்ஏ பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் கூறுகையில்: பா.ம.க.,வை பிளவுபடுத்த, தி.மு.க., பணம் கொடுத்துள்ளது. குறிப்பாக சிங்கப்பூரில், ராமதாஸ் தரப்புக்கு, 110 கோடி ரூபாய் கை மாறியிருக்கிறது.
தி.மு.க.,விடம் வாங்கிய பணத்துக்கு கணக்கு காட்டவேண்டும் என்பதற்காக, சேலத்தில் கூட்டியது தான், பொதுக்குழு, செயற்குழு கூட்டம்.ராமதாஸ் உறவுகள், அன்புமணியை ஒருமை யில் பேசியது நாகரிகம் இல்லை. எங்களை அதேபோல பதிலடி கொடுக்க வேண்டாம் என அன்புமணி சொல்லியுள்ளார். அதனால் அடங்கி உள்ளோம்.
இல்லையென்றால் எங்களாலும் பேச முடியும். பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக நாடகமாடியுள்ளனர். டிச., 29ல், ராமதாஸ் கூட்டியது வெறுப்பு அரசியல் கூட்டம். என கூறியுள்ளார்.
What's Your Reaction?

