உயிருக்கு ஆபத்து - காதல் ஜோடி போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம்

அகஸ்தியர் ஆலயத்திற்கு சென்று முறைப்படி கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டோம்

Dec 22, 2023 - 19:12
உயிருக்கு ஆபத்து - காதல் ஜோடி போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம்

காதல் திருமணம் செய்து கொண்ட சென்னையை சேர்ந்த சிவில் இன்ஜினியர் மகள்  உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தனது கணவரின் குடும்பத்தினரோடு திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா சே.அகரம் பகுதியைச் சேர்ந்த சிவில் வேலை செய்யும் 24 வயதான அஜித் என்பவர் சென்னை அருகில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்த 19 வயதான பிரீத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரீத்தாவின் தந்தை அசோக்குமார் காவல்துறையினரின் உதவியோடு அஜித் வீட்டிற்கு சென்று அஜித்குமாரின் தாய் அன்னபூரணி மற்றும் அஜித்தின் அண்ணன் சத்தியமூர்த்தியை காரில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகில் உறவினரின் வீட்டிற்கு அழைத்து சென்றதாகவும், அங்கு ஆற்றின் அருகில் வைத்து உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் தாக்கியுள்ளார்.

இதனால் அஜித் மற்றும் பிரீத்தா அஜித்தின் குடும்பத்தினரோடு திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பிரீத்தா கூறுகையில்,  கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அருகில் உள்ள அகஸ்தியர் ஆலயத்திற்கு சென்று முறைப்படி கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டோம்.எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா சே.அகரம் கிராமத்தில் வசித்து வருவதால் உரிய பாதுகாப்பு வேண்டும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow