சாலையில் திரிந்த மாட்டின் மீது மோதி உயிரிழந்த எஸ். எஸ். ஐ!
தஞ்சையில் மட்டும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்பட்ட விபத்தில் இதுவரை நான்கு பேர் உயிர் இழந்து உள்ளனர்.
பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சாலையில் குறுக்கே நின்ற மாடு மீது மோதி பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாநகர், புறநகர், கிராமங்களில் கறவை நேரம் தவிர மற்ற நேரங்களில் மாடுகள் சாலையில் சுற்றி திரிவதோடு, சாலை குறுக்கே படுத்து விடுகிறது.மாடுகளை தெருக்களில் மேய விடக்கூடாது, மீறி மேய விட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி, ஊராட்சி பகுதிகளில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், மாட்டின் உரிமையாளர்கள் செவி மடுக்காமல் மாடுகளை அவிழ்த்து விடுவதால் மாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன.இதன் காரணமாக, தோகூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார் கடந்த 19ம் தேதி இரவு பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தபோது சாலையில் குறுக்கே நின்ற மாடு மீது மோதினார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிர் இழந்தார்.தஞ்சையில் மட்டும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்பட்ட விபத்தில் இதுவரை நான்கு பேர் உயிர் இழந்து உள்ளனர்.
What's Your Reaction?