பேருந்து படியில் ஆபத்தான பயணம்-கீழே விழுந்து மாணவர் காயங்களுடன் உயிர் தப்பிய பதைபதைக்கும் வீடியோ காட்சி

இதுபோன்று பயணிகளை ஏற்றி செல்லும் பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Feb 20, 2024 - 07:23
Feb 20, 2024 - 07:25
பேருந்து படியில் ஆபத்தான பயணம்-கீழே விழுந்து மாணவர் காயங்களுடன் உயிர் தப்பிய பதைபதைக்கும் வீடியோ காட்சி

வாலாஜாபேட்டையில் தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற கல்லூரி மாணவர் சாலையில் கீழே விழுந்து  காயங்களுடன் உயிர் தப்பிய பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து பனப்பாக்கம், வாலாஜாபேட்டை வழியாக வேலூருக்கு தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் பின்பக்கம் உள்ள ஏணியில் ஒரு கல்லூரி மாணவனும், படிக்கட்டில் சில மாணவர்களும் தொங்கியபடி சாகச பயணம் செய்துள்ளார். 

பேருந்து வாலாஜாபேட்டை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகில் செல்லும்போது படியில், பயணம் செய்த கல்லூரி மாணவன் ஒருவன் புத்தக பையுடன் சாலையில் கீழே உருண்டு விழுந்து லேசான காயங்களுடன் உயிர்த்தப்பிய பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. 

அதே நேரம் படிக்கட்டில் இருந்து மாணவன் கீழே விழுந்ததை கூட பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் கவனிக்காமல் தொடர்ந்து பேருந்து இயக்கி செல்கிறார்.இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க பேருந்து படிக்கட்டில் மட்டுமல்ல பேருந்தின் பின்னால் உள்ள ஏணியில் நின்றபடி சாகசம் செய்யும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை காவல்துறையினரும், இதுபோன்று பயணிகளை ஏற்றி செல்லும் பேருந்து உரிமையாளர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow