தருமபுரி: டீ கடையில் வாங்கிய வடையில் பல்லி !
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பேப்பர்களை பறிமுதல் செய்தனர்.கடை உரிமையாளருக்கு ஐந்தாயிரம் அபராதம் விதித்தனர்.
தருமபுரி அருகே டீ கடையில் வாங்கிய வடையில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில்,உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கடைக்கு ஐந்தாயிரம் அபராதம் விதித்தனர்.
தருமபுரி நகர பகுதியில் கந்தசாமி வாத்தியார் தெருவில் உள்ள டீ கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த வடையை வாங்கி வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட முயற்சித்துள்ளார். அப்போது வடையில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் கடை உரிமையாளரிடம் காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபடுட்டுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் நேரடி விசாரணை நடத்தி கடையை ஆய்வு செய்தனர்.மேலும் சமையல் செய்யும் இடத்தையும் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பிறகு அசுத்தம் ஆக இருந்ததால் கடை உரிமையாளர் அழைத்து என்னது இப்படி வைத்துள்ளீர்கள் என எச்சரித்தனர்.மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பேப்பர்களை பறிமுதல் செய்தனர்.கடை உரிமையாளருக்கு ஐந்தாயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இதையெல்லாம் சரி செய்த பின்புதான் கடையை திறக்க வேண்டும் என எச்சரித்தனர்.
-பொய்கை கோ.கிருஷ்ணா
What's Your Reaction?