மெரினா கடற்கரையில் காவலரை வம்பிழுத்த தனலெட்சுமியின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா?

Chennai,Marina,Couplegoal,Tnpolice,Viralvideo,Chennaipolice,Marinabeach,Couple,Viralcouple, சென்னை, மெரினா, கடற்கரை, தம்பதி, போலீஸ், வைரல், வீடியோ, அடாவடி

Oct 24, 2024 - 19:58
Oct 24, 2024 - 20:01
மெரினா  கடற்கரையில் காவலரை வம்பிழுத்த தனலெட்சுமியின்  தற்போதைய நிலைமை என்ன தெரியுமா?

சென்னை மெரினா  நள்ளிரவில் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அநாகரிகமாக பேசிய  தம்பதி கைதான நிலையில் அந்த பெண் தற்போது தனக்கு ஜாமின் வழங்கக்கோரி மனு அளித்திருக்கிறார்.  

கடந்த 20-ம் தேதியன்று, சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவு நேரத்தில் மைலாப்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரின் அருகே ஒரு  தம்பதி மதுபோதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் இரவு நேரமாகிவிட்டதாகவும் விரைவில் இடத்தைக் காலிசெய்யுமாறும்  போலீசார் கூறியுள்ளனர். அதற்கு மதுபோதையில் இருந்த அந்த தம்பதி  காவலரை சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் திட்டியுள்ளனர். அச்சமயம் அதனை வீடியோ எடுத்தபடியே காவலர் அவர்களை அங்கிருந்து கிளம்பச் சொன்னார்.

 

 அப்போதும் சற்றே அசராத அந்த தம்பதி  “எங்களை வீடியோ எடுத்துக்கொள்ளுங்கள்,.. நாங்களே போஸ் கொடுக்கிறோம்” எனக்கூறி அசால்ட்டாக போஸ் கொடுத்துவிட்டு தனக்கு அரசியல்வாதிகளைத் தெரியும் என்று சொன்னபடியே  போலீசாரை இடிப்பதுபோல காரை எடுத்துக்கொண்டு  அவசரமாக இடத்தைக் காலி செய்தனர்.

சற்றே முகம் சுளிக்கும் வகையில்  இருவரும் நடந்துகொண்டஅந்த வீடியோ காலைக்குள் சமூக வலைதளங்களில் வைரலாகவே,... அத்தம்பதியை காவல்துறையினர் வலைவீசித் தேடினர். அதன்பின் இருவரையும் ஒரு லாட்ஜில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள்  அம்பலமாகின.

தம்பதி என கருதப்பட்ட அவர்கள்  இருவரும் கார் விற்பனை செய்து வரும் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி என்று தெரியவந்தது. இருவரும்  சுமார் 15 வருடங்களாக திருமணம் தாண்டிய  உறவில் இருந்து வந்தது அம்பலமானது.

 இதற்கிடையில்,  இந்த வீடியோவே வைரலான நிலையில்,  சந்திரமோகன் மற்றும் தனலெட்சுமி இருவரும் அன்றைய தினம்  பட்டினம்பாக்கம் கடற்கரையில் ரோந்து பணிக்கு வந்த காவலரிடமும் தகராறு செய்த மற்றுமொரு வீடியோ வைரலானது.  அதில் கடற்கரையில் அமர்ந்தபடியே தனக்கு உதயநிதியை ( துணை முதல்வர்) தெரியும் என்றும்   தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறி அந்தக் காவலரையும் தனது செல்போனில் வீடியோ எடுத்து  மிரட்டியிருந்த வீடியோ  வெளியானது. அந்த வீடியோவில் காவலரைப் பார்த்து, “ நீ விஜயகாந்த் போல இருக்கிறாய், யாரை வேண்டுமானாலும் கூப்பிட்டு வா” எனவும் வம்பிழுத்துள்ளார்.

இவ்வாறிருக்க, காவல்துறை கைதுக்கு பிறகு, சந்திரமோகன்  தான் செய்தது தவறு, இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டேன் என மன்னிப்பு கேட்டிருந்தார். மேலும்,  அவர்கள் இருவர் மீதும் மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

 இந்நிலையில், அதில் காவலரிடம் வாக்குவாதம் செய்த அப்பெண் தனலெட்சுமி  தனக்கு ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில், தான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவர் எனவும், தன் மீது தவறாக புகார் அளிக்கபட்டுள்ளதாகவும், தவறுக்கு தான் மன்னிப்புக்கோரியதாகவும்  கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க  |  “எல்லாமே பேட்ச் வொர்க்,.... அரசு கட்டித்தந்த வீட்டில் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?” - குற்றம்சாட்டும் சிபிஎம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow