ண் குழந்தை பிறந்த 5 நாட்களில் தாய் உயிரிழப்பு- தவறான சிகிச்சை காரணம் என உறவினர்கள் புகார்

சௌந்தர்யாவின் கணவர் சௌந்தர் கொடுத்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jan 11, 2024 - 16:20
Jan 11, 2024 - 18:51
ண் குழந்தை பிறந்த 5 நாட்களில் தாய் உயிரிழப்பு-  தவறான சிகிச்சை காரணம் என உறவினர்கள் புகார்

தவறான சிகிச்சையால் உயிரிழந்து விட்டதாக கூறி ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகளை உடைத்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த  5 நாட்களில் தாய் சௌந்தர்யா(26)இன்று காலை உயிரிழந்தார்.கடந்த 2ம் தேதி வியாசர்பாடியை சேர்ந்த சௌந்தர்யா பிரசவத்துக்காக ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 6ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டு நிற்காததாதல், மருத்துவர்கள் கர்ப்பப்பையை அகற்றி உள்ளனர்.தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சௌந்தர்யா இன்று காலை இறந்தார்.இந்த நிலையில் தவறான சிகிச்சையால்  இறந்து விட்டதாக கூறி சௌந்தர்யாவின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகளை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த ராயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சௌந்தர்யாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.இது தொடர்பாக சௌந்தர்யாவின் கணவர் சௌந்தர் கொடுத்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow