Fahadh Faasil: ஃபஹத் பாசிலுக்கு இப்படியொரு பிரச்சினையா..? அட பாவமே... அதிர்ச்சியில் திரையுலகம்!

மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் ஃபஹத் பாசில், தனக்கு ADHD பாதிப்பு இருப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 28, 2024 - 17:17
Fahadh Faasil: ஃபஹத் பாசிலுக்கு இப்படியொரு பிரச்சினையா..? அட பாவமே... அதிர்ச்சியில் திரையுலகம்!

எர்ணாகுளம்: இயக்குநர் பாசிலின் மகனாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஃபஹத் பாசில். முதல் படத்திலேயே நடிப்பில் படுமோசம் என விமர்சனங்களை சந்தித்த ஃபஹத், அதன்பின்னர் அமெரிக்கா பறந்துவிட்டார். ஆனாலும் மீண்டும் சினிமாவில் ஹீரோ அவதாரம் எடுத்த ஃபஹத் பாசில், தற்போது பான் இந்தியா அளவில் வெரைட்டி காட்டி வருகிறார். மலையாளம் மட்டுமில்லாமல் தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் படங்களில் மிரட்டிய அவர், புஷ்பா, புஷ்பா 2 என அக்கட தேசத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். அதேபோல் கடந்த மாதம் ரிலீஸான ஃபஹத் பாசிலின் ஆவேசம் திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.   

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் தனக்கென தனி முத்திரை பதிப்பதில் கில்லாடியான ஃபஹத், தனக்கு ADHD பாதிப்பு இருப்பதாகக் கூறி அதிர்ச்சிக் கொடுத்துள்ளார். 41 வயதான ஃபஹத் பாசிலுக்கு ADHD பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மருத்துவ உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ADHD என்பது கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு என சொல்லப்படுகிறது. இதில் பாதிப்படைந்த ஒருவர், கடுமையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என சொல்லப்படுகிறது. ADHD பாதிப்பு பொதுவாக குழந்தை பருவத்தில் கண்டறியப்படுவது தான் வழக்கம். ஆனால் இந்த பிரச்சினை ஃபஹத் பாசிலுக்கு இருப்பது. பெரியவர்களில் நரம்பியல் வேறுபாடு பற்றிய உரையாடலுக்கு வழிவகுத்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பீஸ் வேலி பள்ளி திறப்பு விழாவில் ஃபஹத் பாசில் கலந்துகொண்டார்.  அப்போது தான் தனக்கு ADHD பாதிப்பு இருப்பது குறித்து பேசிய ஃபஹத் பாசில், அது அவ்வளவு பெரியதாக இல்லாவிட்டாலும், எனக்கும் இந்த கோளாறுக்கான சில குணாதிசயங்கள் இருப்பதாக தெரிவித்தார். மேலும், குழந்தைகளிடையே அதிகம் ஏற்படும் இந்த குறைபாட்டை, சிறுவயதிலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம். ஆனால், 41 வயதான தனக்கு இது உறுதி செய்யப்பட்டுள்ளதால், குணப்படுத்த வாய்ப்புள்ளதா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டுள்ளதாகவும் ஃபஹத் பாசில் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஃபஹத் பாசிலுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், ADHD பாதிப்பு விரைவில் குணமடையும் எனவும், அதற்காக தாங்கள் பிரார்த்தனை செய்வதாகவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஃபஹத் பாசிலுக்கு மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் அவரது நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow