மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை-சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு

பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது சகோதரிக்கும், தலா 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Jan 13, 2024 - 23:41
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை-சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனது தந்தையால் எட்டு ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாக சென்னையை 12 வயது சிறுமி தாயிடம் கூறியுள்ளார். கணவரின் நடந்தையை கண்டித்த மனைவி, காவல்துறையில் புகார் அளிக்காத நிலையில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமியே கடிதம் மூலம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதனடிப்படையில் சிறுமியின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

வழக்கிலிருந்து சிறுமியின் மாமா ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றத்தை மறைத்ததற்காக, சிறுமியின் தாய்க்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது சகோதரிக்கும், தலா 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow