தமிழக பாஜக மாநில துணை தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்

பாஜக மாநில துணை தலைவர் கரு நாகராஜன் மீது பாஜக பெண் நிர்வாகி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். 

தமிழக பாஜக மாநில துணை தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்
தமிழக பாஜக மாநில துணை தலைவர் மீது பாலியல் புகார்

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக இருப்பவர் கரு.நாகராஜன். இவர் மீது சென்னை மாவட்ட மகளிரணி தலைவரான தங்கசோபனா என்பவர் பாலியல் புகார் கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தங்கசோபனா தனது கடிதத்தில் 2018 - ம் ஆண்டு முதல் தனக்கு நேர்ந்த சித்திரவதைகளை வரிசைப்படுத்தி எழுதியுள்ளார். 

கட்சி அலுவலகமான கமலாலயத்தில் தன்னைத் தனியாக அழைத்த கரு.நாகராஜன் , கையைப் பிடித்து இழுத்து வலுக் கட்டாயமாக முத்தமிட முயன்றதாகவும், தான் அவரை அறைந்து விட்டு வெளியே வந்ததாகவும் சோபனா குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் 2022 - ல் கட்சி வேலை என்று கூறி ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்து, காரின் உள்ளே அமர வைத்து தன்னிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக அந்த கடிதத்தில் குற்றஞ் சாட்டியுள்ளார். 

எனக்கு இணக்கமாக இருந்தால் உன்னை மகாராணி போல் வைத்திருப்பேன் என்று கூறி பலாத்கார முயற்சி நடந்ததாகவும். தனது பாலியல் இச்சைக்கு இணங்கவில்லை என்றால், அரசியல் வாழ்க்கையையே முடித்து விடுவேன் என்றும், கட்சியை விட்டு நீக்கி விடுவேன் என்றும் கரு.நாகராஜன் மிரட்டியதாக சோபனா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் கரு.நாகராஜன் மீது எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை காவல்நிலையத்தில் பாஜக பெண் நிர்வாகி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்  கரு நாகராஜனின் ஆதரவாளர்களின் தனக்கு  கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக பாஜக பெண் நிர்வாகி புகார் அளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow