தஞ்சையிலும், ஓசூரிலும் விரைவில் பயணிகள் விமான சேவை!
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தையோ,சுற்றச்சூழலையோ பாதிக்கக்கூடிய தொழில்பேட்டைகள் எதுவும் எந்த காலத்திலும் வராது
தமிழகத்தின் வளர்ச்சிக்காக தஞ்சையிலும்,ஓசூரிலும் பயணிகள் விமான போக்குவரத்து துவங்க உள்ளது தஞ்சையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே 27 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டைட்டல் பார்க் உருவாக்கிட கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.பணிகளை இன்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “டெல்டா மாவட்டங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சையில் டைட்டல் பார்க் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தவுடன் மிகப்பெரிய நிறுவனங்கள் வரவிருக்கின்றன.அதன் மூலம் தொழில்முனைவோருக்கும்,இளைஞர்களுக்கும் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.தமிழக முதல்வர் கண்ணை இமை காப்பதுபோல் காத்து வருவதால், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தையோ,சுற்றச்சூழலையோ பாதிக்கக்கூடிய தொழில்பேட்டைகள் எதுவும் எந்த காலத்திலும் வராது.
விவசாயம் சார்ந்த சுற்றுச்சூழல் பாதிக்காத தொழில்பேட்டைகள் மட்டுமே அமையும்.மேலும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக தஞ்சையில் விமானபடை தளத்தின் ஒரு பகுதியில் பயணிகள் விமான போக்குவரத்து விரைவில் துவங்க உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.ஒசூரிலும் பயணிகள் போக்குவரத்துக்கான விமான சேவைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது” என்றார்.
What's Your Reaction?