10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

10ஆம் வகுப்பு பொதுதேர்வில் தலைநகர் சென்னை 30வது இடம் இடம் பிடித்துள்ளது. தலைநகர் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கடுமையாக சரிந்துள்ளது

May 10, 2024 - 12:24
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?


தமிழகத்தில் இன்று (மே.10 ) 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 10ஆம் வகுப்பில் மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 8லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 ஆகும்.

தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடத்திலும், சிவகங்கை இரண்டாம் இடத்திலும் ராமநாதபுரம் மூன்றாம் இடத்திலும் கன்னியாகுமரி 4ஆம் இடத்திலும் திருச்சி 5ஆம் இடத்திலும் உள்ளது. 

இதன் வரிசையில் சென்னை 89.14 சதவிகித தேர்ச்சியுடன் 30 ஆம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு சென்னை 29வது இடம் பிடித்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு இடம் பின் தங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடைசி 10 இடங்களில் வட மாவட்டங்கள் உள்ளன.

சென்னை, திருப்பத்தூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி திருவள்ளூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை வேலூர் ஆகியவை கடைசி 10 இடங்களில் உள்ளன.

தலைநகர் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.31 என இருந்தது.  இந்த ஆண்டு அது  79.07 ஆக சரிந்துள்ளது தலைநகர் சென்னை தேர்ச்சி விகிதத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது கவனிக்கத் தகுந்ததாக மாறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow