சட்டென குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் தங்கம் ரூ.53,800.. இப்போது முதலீடு செய்யலாமா?

ஆபரணத்தங்கத்தின் விலை இன்றைய தினம் சரவனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.6725 ஆகவும் ஒரு சவரன் ரூ.53,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

May 13, 2024 - 10:03
சட்டென குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் தங்கம் ரூ.53,800.. இப்போது முதலீடு செய்யலாமா?

தங்கம் மிகச்சிறந்த முதலீடு என்பதால் இந்தியர்கள் பலரும் தங்கம் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். பெண்கள் தங்களின் மகள்களின் திருமணத்தின் போது தங்க நகைகளை சீதனமாக தருகின்றனர். கடந்த சில வாரங்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. அட்சய திருதியை பண்டிகை நாளில் தமிழ்நாட்டில் ரூ.14000 கோடிக்கு தங்கம் விற்பனையானது. அதன் பின்னர் 2 நாட்களாக தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமையான அட்சய திருதியை நாளில் காலை 6 மணிக்கு தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,660 ஆக விற்பனையானது. பின்னர், காலை 8 மணிக்கு தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.6,705க்கு விற்பனையானது. பிற்பகலில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது.  கிராம் ஒன்றுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.6,770க்கு விற்பனையானது. ஒரு ரூ.54,160க்கு விற்பனையானது. 

சனிக்கிழமைன்று  தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூ.6750 ஆக விற்பனையானது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54000 ஆக விற்பனையானது. இந்த நிலையில் இன்றைய தினம் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூ.6750 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.53,800 ஆக விற்பனையாகிறது. 

தங்கத்தின் கடந்த ஒரு மாத காலமாக ஏறி இறங்கி பரமபதம் ஆடி வருகிறது. அரை லட்சத்திற்கு மேல் தங்கம் விற்பனையானாலும் தங்கம் வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow