சென்னையில் மட்டும் இவ்வளவா: கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் ? போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
2025 ஆம் ஆண்டு 2362 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்ட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டலம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
2,362 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல அதிகாரிகள் 2025-ஆம் ஆண்டில் கடத்தல் கும்பல்களுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2025-ஆம் ஆண்டில், சென்னை மண்டலம் மொத்தம் 2,362.770 கிலோ போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது. இதில் 2,344.470 கிலோ கஞ்சா மற்றும் 11.725 கிலோ செயற்கை போதைப்பொருட்கள் ஆகும். இந்த வழக்குகளில் மொத்தம் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, சுங்கத்துறையுடன் இணைந்து நடத்திய சோதனையில் 7.618 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டு, நாடு தழுவிய தேடுதல் வேட்டையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட கடத்தல் காரர்களின் நிதி ஆதாரங்களை முடக்குதல் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துக்கள் மீது நிதி விசாரணை போன்றவை மேற்கொள்ளப்பட்டு முற்றிலுமா போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையை தடுக்கும் வகையில் விசாரணை செய்து வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடத்தல் கும்பலின் ரூ. 14 கோடி சொத்துக்கள் முடக்கம்..
2025-ல் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கு எதிரான விசாரணையில், சுமார் 12.33 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன. துபாயில் இருந்து செயல்பட்டு வந்த ஹவாலா ஏஜென்ட் ஒருவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்தியா மற்றும் இலங்கை இடையே போதைப்பொருள் கடத்தலுக்குப் பணப் பரிமாற்றம் செய்து வந்த இவர், நாட்டை விட்டுத் தப்ப முயன்றபோது பிடிபட்டார். அவரிடமிருந்து ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஏப்ரல் 2025-ல் முடக்கப்பட்டன.
நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள் இந்த ஆண்டில் முடிக்கப்பட்ட 15 வழக்குகளில், 11 குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் குற்றவாளிகளுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளின் ரூ. 1.20 கோடி மதிப்பிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்ய 'சபேமா' (SAFEMA) அமைப்பிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 'டார்க்நெட்' முடக்கம்
சர்வதேச கும்பல் கைது
இணையத்தின் கள்ளச் சந்தையான 'டார்க்நெட்' மூலம் போதைப்பொருள் விற்பனை செய்வதைக் கண்காணிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. இதன் மூலம் கொச்சியில் "KETAMELON" என்ற பெயரில் செயல்பட்டு வந்த விற்பனையாளர் பிடிபட்டார். 2023 முதல் இதுவரை மூன்று பெரிய டார்க்நெட் கும்பல்களைச் சென்னை மண்டலம் முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பழைய குற்றவாளிகள் கைது.
சர்வதேச அளவில் இன்டர்போல் மற்றும் இலங்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் பலனாக, 2007 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் இருந்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் உட்பட மொத்தம் 6 பேர் இந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இதில் 2 பேர் கொழும்புவிலிருந்து திரும்பியபோது பிடிபட்டனர். மேலும், சிறைத் தண்டனை முடித்த 8 வெளிநாட்டு குற்றவாளிகள் திருச்சிராப்பள்ளி சிறப்பு முகாம் மூலம் அந்தந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆம்பெட்டமைன் வகை போதைப்பொருட்களின் பயன்பாடு குறைந்து, 'ஹைட்ரோபோனிக் வீட்' (Hydroponic Weed) மற்றும் மருத்துவப் பயன்பாட்டு போதை மருந்துகளின் புழக்கம் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்ன மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
What's Your Reaction?

