எமனை வென்ற பிஞ்சு குழந்தை உயிரை பணயம் வைத்த இளைஞர் மீட்கப்பட்ட பரபரப்பு நிமிடங்கள்...
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பதறிப்போன தாய், குழந்தையை காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டு இருக்கிறார். இதை பார்த்த சக குடியிருப்பு வாசிகளும் சத்தம் போட அந்த பகுதியே பரபரப்பானது.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் தவறி விழுந்த ஒருவயது குழந்தையை, உயிரை பணயம் வைத்து பத்திரமாக மீட்ட இளைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன. எமனை வென்ற பிஞ்சு குழந்தையை மீட்டது எப்படி?.. நெஞ்ச பதறவைத்த திக்... திக்... திக்... நிமிடங்கள் இதோ...
ஆவடியை அடுத்து, திருமுல்லைவாயலில் உள்ளது Vgn Stafford அடுக்குமாடி குடியிருப்பு. இங்கு முதல் மாடியில் வசிக்கும் வெங்கடேஷ் - ரம்யா தம்பதியின் 7 மாத கைகுழந்தை கிரணுக்கு பால்கனியில் நின்று படி உணவு ஊட்டப்பட்டதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக தாயின் பிடியில் இருந்து இடறி கீழே விழுந்த அந்த குழந்தை, சன்சைடில் உள்ள சீட்டை பற்றிக் கொண்டு கதறி அழுதது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பதறிப்போன தாய், குழந்தையை காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டு இருக்கிறார். இதை பார்த்த சக குடியிருப்பு வாசிகளும் சத்தம் போட அந்த பகுதியே பரபரப்பானது.
இந்த நிலையில், எப்படியாவது அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு விட வேண்டுமென அந்த குடியிருப்பில் வசிக்கும் இளைஞர்கள் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கினர். குழந்தை கீழே விழுந்தால் பத்திரமாக பிடிக்க தரைத்தளத்தில் பெட்சீட்டை விரித்தபடி பலர் நிற்க. கீழ் தளத்தில் உள்ள பால்கனி வழியாக உயிரை பணயம் வைத்து ஏறிய இளைஞர் ஹரி, முதலில் குழந்தையின் துணியை பிடித்து மீட்க முயற்சித்தார். ஆனால், மெலிதான துணி என்பதால், அந்த முயற்சியை கைவிட்டு, குழந்தையின் கையை போராடி பிடித்து பத்திரமாக மீட்டார். அப்போது அங்கு கூடியிருந்த குடியிருப்பு வாசிகள், ஆனந்த கண்ணீரில் சந்தோஷமாக கைத்தட்டி நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.
சிறிய சிராய்ப்பு காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடவுளின் அருளால் ஆபத்தில் இருந்து குழந்தையை மீட்டது மறக்க முடியாத தருணம் என்றும், ஒரு உயிரை காப்பாற்றியது தனக்கு கிடைத்த பாக்கிய குழந்தையை பத்திரமாக மீட்ட ஹரி நெகிழ்ச்சி பட கூறினார்.
குழந்தையை உயிரை பணையம் வைத்து மீட்ட ஹரி மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. எமனை வென்ற பிஞ்சு குழந்தையின் இந்த மீட்பு சம்பவம், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெற்றோரை கவனமாக இருக்க அறிவுறுத்தியிருக்கிறது.
What's Your Reaction?






