Indian 2: இந்தியன் 2-க்காக அந்த 70 நாட்கள்... கமல்ஹாசனை விட்டுக்கொடுக்காத ஷங்கர்!

இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் குறித்து ஷங்கர் பேசியது படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Jun 25, 2024 - 17:03
Indian 2: இந்தியன் 2-க்காக அந்த 70 நாட்கள்... கமல்ஹாசனை விட்டுக்கொடுக்காத ஷங்கர்!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது. 1996ல் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் கமலுடன் சித்தார்த்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், மறைந்த விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று இந்தியன் 2 ட்ரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி வடபழனியில் உள்ள Forum மாலில் நடைபெற்றது. இதில் கமல், ஷங்கர், சித்தார்த், அனிருத் ஆகியோருடன் படக்குழுவினரும் பங்கேற்றனர்.

அப்போது பேசிய இயக்குநர் ஷங்கர், இந்தியன் 2 படத்திற்காக மேக்கப் போட கமல் ரொம்பவே கஷ்டப்பட்டதாகக் கூறியுள்ளார். அதாவது இந்தியன் படத்திற்காக 40 நாட்கள் தான் கமலுக்கு மேக்கப் போட வேண்டியிருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்திற்காக 70 நாட்கள் வரை கமல் இந்தியன் தாத்தா கெட்டப்பில் நடித்தார். இதனால் தினமும் மேக்கப் போட 3 மணி நேரமும், அதனை கலைக்க 3 மணி நேரமும் ஆகும். அதுவரை அவரால் சாப்பிட முடியாது. படப்பிடிப்புக்கு எல்லோரும் வருவதற்கு முன்பே கமல் வந்துவிடுவார், அதேபோல் அனைவரும் சென்ற பின் தான் கமல்ஹாசன் கிளம்புவார். அந்தளவிற்கு கமல் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் என இயக்குநர் ஷங்கர் நெகிழ்ச்சியாக பேசினார்.

அதேபோல், இந்தியன் 2 படத்தில் அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக வந்துள்ளது. ட்யூன் 80% ஓக்கே என்றால் விடமாட்டார், நான் 100% திருப்தி என சொல்லும் வரை ட்யூன்கள் கொடுத்துக்கொண்டே இருப்பார் என அனிருத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டியிருந்தார். இதனால் இந்தியன் 2 படத்தின் பிஜிஎம் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக இந்தியன் 2 பாடல்கள் எதிர்பார்த்தளவில் இல்லை என நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. முக்கியமாக “தாத்தா வர்றாரு, கதற விடப் போறாரு” என்ற பாடலை பங்கம் செய்திருந்தனர். இந்தியன் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசை தரமாக இருந்ததாகவும், இந்தியன் 2வில் அந்த வைப் இல்லை என்றும் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow