புதுச்சேரியில் போலி மருத்துவருக்கு 7 ஆண்டுகள் சிறை 

ஏழு ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Dec 15, 2023 - 14:44
Dec 15, 2023 - 17:43
புதுச்சேரியில்  போலி மருத்துவருக்கு 7 ஆண்டுகள் சிறை 

புதுச்சேரியில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் கமலம் இவரது மகள் மாரியம்மாள்.இவர் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் காய்ச்சல் என்று அதே பகுதியில் உள்ள மருத்துவர் ஜோதி என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். 

அப்போது மாரியம்மாளை பரிசோதித்த ஜோதி, அவருக்கு ஊசிபோட்டுள்ளார். ஊசிபோட்ட சிறிது நேரத்தில் மாரியம்மாள் மயங்கி விழுந்ததையடுத்து, அவரது தாயார் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது தெரியவந்தது.  

இதுதொடர்பாக மங்களம் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், மருத்துவர் ஜோதி போலியானவர் என தெரியவந்ததை அடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கானது கடந்த 11 ஆண்டுகளாக புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அனைத்து சாட்சியங்களும் விசாரித்த நீதிபதி இளவரசன், போலி மருத்துவர் ஜோதிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

-பி.கோவிந்தராஜு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow