Nellai: உரிமைத்தொகையை கொச்சைப்படுத்துவதா?.. குஷ்பூ உருவ பொம்மையை எரித்த திமுகவினர்...
குஷ்பூ மன்னிப்பு கேட்க வேண்டுமென அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்
அண்மையில், தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகையை பிச்சை என தேசிய மகளிர் உரிமை ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பூ குறிப்பிட்டு பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தன.
ஆனால், இதற்கு விளக்கம் அளித்த குஷ்பூ, முந்தைய காலங்களில் மத்திய உணவு திட்டத்தையும், பெண்கள் இலவச பயணத் திட்டத்தையும் திமுகவினர் பிச்சை எனக் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி சாடினார். அவர்களிடம் எந்த கேள்வியும் கேட்காத திமுக, தம்மிடம் எந்த விளக்கத்தை எதிர்பார்க்கிறது என்றும் அவர் வினவினார்.
இதனால், மேலும் கோபம் அடைந்த திமுகவினர், குஷ்பூ எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். நெல்லை வண்ணாரப்பேட்டை மற்றும் டவுண் வாகையடி பகுதிகளில் மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலாசத்தியானந்த் தலைமையில் மகளிரணியினர் மற்றும் திமுகவினர் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் குஷ்புவின் உருவபொம்மையை எரிக்க முயற்சித்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், உதவித்தொகை கொடுக்கவில்லை உரிமைத்தொகை தான் கொடுக்கிறார்கள் அதனை குஷ்பு இழிவுப்படுத்திவிட்டதாக தெரிவித்தார். மேலும், குஷ்புவை போல பேசத்தெரியும் ஆனாலும் நாங்கள் பேசமாட்டோம் எனக் கூறினார்.
What's Your Reaction?