Kaduvetti: காடுவெட்டி சக்சஸ் மீட்..? அலப்பறையை கூட்டிய RK சுரேஷ்.. ஒரு ஷோ கூட ஹவுஸ்ஃபுல் ஆகிருக்காது

ஆர்கே சுரேஷ் நடிப்பில் சோலை ஆறுமுகம் இயக்கிய காடுவெட்டி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

Mar 16, 2024 - 14:41
Kaduvetti: காடுவெட்டி சக்சஸ் மீட்..? அலப்பறையை கூட்டிய RK சுரேஷ்.. ஒரு ஷோ கூட ஹவுஸ்ஃபுல் ஆகிருக்காது

பாலாவின் தாரை தப்பட்டை மூலம் வில்லனாக அறிமுகமான ஆர்கே சுரேஷ், அடுத்தடுத்து பல படங்களில் என்ட்ரி கொடுத்தார். சில மாதங்களுக்கு முன்னர் ஆருத்ரா மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்தவர், தற்போது காடுவெட்டி திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சோலை ஆறுமுகம் இயக்கத்தில் காடுவெட்டி குருவின் பயோபிக்காக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு எதிர்பார்த்தளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.  

ஆனால், ஹீரோ ஆர்கே சுரேஷ், காடுவெட்டி வெற்றிக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு அசர வைத்துள்ளார். காடுவெட்டி முதல் ஷோ நேற்று காலை 10 மணிக்கு மேல் தான் திரையிடப்பட்டது. ஆனால், மாலை 7.30 மணிக்கே படம் சக்சஸ் ஆகிவிட்டதாக செல்ஃப் ப்ரோமோஷன் செய்துள்ளார் ஆர்கே சுரேஷ். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

அதில், “காடுவெட்டி படத்த சூப்பர் ஹிட்டாக்குன ரசிகர்களுக்கு நன்றி. காடுவெட்டி ஐயாவோட பயோபிக்கில் நடிச்சதுல பெருமையா இருக்கு. தாய்மார்கள், தங்கைமார்கள், தம்பிமார்கள், நண்பர்கள், உற்றார்கள், உறவினர்கள் எல்லாருக்கும் நன்றி..” என ஒருத்தரையும் விடாம விரட்டி விரட்டி நன்றி தெரிவித்துள்ளார் ஆர்கே சுரேஷ். இந்த வீடியோவில் ஆர்கே சுரேஷின் ஆடியோ சரியாக வரவே இல்லை என கமெண்ட்ஸ் செய்துள்ள நெட்டிசன்கள், படம் ரிலீஸாகி ஒருநாள் கூட ஆகல, அதுக்குள்ள சக்சஸ்ன்னு இந்த கூவு கூவுறீங்களே என ஆர்கே சுரேஷை ட்ரோல் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow