நவீன அரசியல் தேவை.. நான் வித்தியமாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன்.. கமல் பேச்சு
ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளாமல், திருத்தி கொள்ளும் அரசியலாக நவீன அரசியல் இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மதுரை ஆனையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக கமல்ஹாசன், பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என கேட்கின்றனர். அரசியலுக்கு வந்தால்தான் நல்லது செய்ய முடியும் என்று புரிந்து கொண்டு அரசியலுக்கு வந்தேன்" என்றார்.
மேலும் கமல்ஹாசன் கூறுகையில் "வேட்பாளர் சு.வெங்கடேசனும் வந்த காரணமும் அதுதான். நான் வித்தியமாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன். செய்யப்போவதைப் பற்றித்தான் பேச வேண்டும். செய்யத் தவறியவர்களை பற்றி பேசுவது நேர விரயம். நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டி கொள்வதாக இருக்கக் கூடாது. திருத்திக் கொள்வதாக இருக்க வேண்டும்.
போஸ்டர் அடிச்சு போட்டு இருக்காங்க நோட்டீஸ் கொடுத்து இருக்காங்க நல்லவர் வருகிறார் என்று. இவரும் நம்ம நல்லவர் தான். நான் வருகிறேன் என நோட்டீஸ் அடித்திருந்தார்கள் ஆனால் இவர் வரவேண்டும் என நான் நோட்டீஸ் அடிக்கிறேன்.
சு.வெங்கடேசன் 300 கோடிக்கு மேல் கல்விக்கடன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். இவருக்கு கிடைத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பல பேருக்கு கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
மதுரையும் வீரத்தையும் பிரிக்க முடியாது. மதுரையையும் பாசத்தையும் பிரிக்க முடியாது. மதுரையையும் திமுகவையும் பிரிக்க முடியாது. மதுரையும் கமலையும் படிக்க முடியாது. ஜல்லிக்கட்டின் தலைநகரம் மதுரை அலங்காநல்லூர். உலகம் முழுவதும் விளையாடும் வீர விளையாட்டாக மாறும்" என்றார்.
What's Your Reaction?