கொடைக்கானலில் குணா குகை மட்டும் பேமஸ் இல்ல.. தூண் பாறையில் வனத்துறை செய்த செயல்.. சூப்பர்ல

Apr 17, 2024 - 17:39
கொடைக்கானலில் குணா குகை மட்டும் பேமஸ் இல்ல.. தூண் பாறையில் வனத்துறை செய்த செயல்.. சூப்பர்ல

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயின்ட் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. கோடை விடுமுறையும் தொடங்கிவிட்டதால் அங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். கொடைக்கானலுக்குச் செல்ல மலை ஏறும்போதே மஞ்சளாறு அணை, வெள்ளி நீர் வீழ்ச்சி ஆகியவை நம்மை ரம்மியமாக வரவேற்கும். 

நகரப் பகுதிக்குள் மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரி நட்சத்திர ஏரி, குதிரை சவாரி, வட்டக்கானல் அருவி போன்ற சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.

சுற்றுலா பயணிகளை கவரும் ஏராளமான விஷயங்கள் கொடைக்கானலில் உள்ள நிலையில் மேலும் ஒரு முத்தாய்ப்பான விஷயத்தை வனத்துறை செய்துள்ளது. கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையிலும், காடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வனத்துறை சார்பில் தூண் பாறை பகுதியில் "ஐ லவ் பாரஸ்ட் கொடைக்கானல்" என்ற வாக்கியத்துடன் கூடிய செல்ஃபி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று (16-04-2024) முதல் சுற்றுலாப்பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபி பாயின்ட் தூண்பாறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் ரம்மியமாக காட்சியளிக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபி பாயின்டின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow