குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கடக ராசிக்காரர்களே.. ரொம்ப கவனம்

குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது. என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Apr 11, 2024 - 17:24
குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கடக ராசிக்காரர்களே.. ரொம்ப கவனம்

கவனமாகச் செயல்பட்டா கணிசமான நன்மைகள் உருவாகும் ஆண்டுங்க. அலுவலகத்துல உங்க செயல்கள்ல அலட்சியமும் அவசரமும் கூடவே கூடாதுங்க. உடனிருப்போர் குறைகளை பெரிதுபடுத்திப் பேசவேண்டாம்க. முக்கியமான கோப்புகளை கவனமாகக் கையாளுங்க. புதிய வேலைவாய்ப்புகள் உங்க எண்ணம்போல அமையும்க. அதுல வறட்டு கௌரவம் மட்டும் பார்க்க வேண்டாம்க. சிலருக்கு பலகாலக் கனவுகள் ஈடேறும்படி பணிவாய்ப்பு அமையும்க. அது நழுவாம இருக்க, திட்டமிடலும் நேரம் தவறாமையும் அவசியம்க.

இல்லத்துல இனிமை இடம்பிடிக்கும்க. வாழ்க்கைத்துணையுடன் மனம்விட்டுப் பேசுங்க. வாரிசுகள் வாழ்க்கைல சுபகாரியங்கள் கைகூடி வரும்க.  வரவு சீராக இருந்தாலும் செலவும் சேர்ந்தே வரும்க. மணமாலை சூடவும், மகப்பேறு அடையவும் குலதெய்வ வழிபாடு அவசியம்க. வீடு, மனை, வாகனம் வாங்க புதுப்பிக்க யோகம் உண்டுங்க. அந்த சமயத்துல அவசரத்தைவிட அனுபவம்தான் அவசியம்க. தரல்,பெறலை நேரடி கவனத்துடன் செய்யுங்க.

செய்யும் தொழில்ல உங்க உழைப்புக்கு ஏற்ப வளர்ச்சி ஏற்படும்க. பங்குவர்த்தகத்துல நிதானம் முக்கியம்க. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்துல உரிய நடைமுறை சட்ட திட்டங்களை மீறாம கடைபிடிக்கணும்க. பரம்பரை வர்த்தகத்துல புதிய மாற்றங்களைச் செய்யலாம்க. அவற்றை குடும்பத்தினரோட ஆலோசனை செய்துட்டு செய்யறது நல்லதுங்க.

அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு செல்வாக்கு நிலைக்கும். சொல்வாக்குல கவனம் இருந்தா, தலைநிமிர்ந்து நடக்கலாம்க. முகஸ்துதி நபர்களை முதல்வேலையா விலக்குங்க.அநாவசிய வாக்குறுதிகளைத் தவிருங்க. பொது இடத்துல நிதானத்தைக் கடைபிடிங்க.

மாணவர்கள் அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படிச்சுடறதும், முடிஞ்சா ஒருமுறை எழுதிப் பார்க்கறதும் நல்லதுங்க. மறதி வராம இருக்கணும்னா, அதிகாலைப்படிப்பை வழக்கமாக்கிக்கறது அவசியம்க.

கலை, படைப்புத் துறையினர் வாசல்தேடிவரும் வாய்ப்புகளை வாய்ச் சவடாலால நழுவவிடாம இருக்கறதுதான் புத்திசாலித்தனம்க.. சின்னச் சின்ன வாய்ப்புகளாக இருந்தாலும் சீரான கவனத்தோட செய்தா சிறப்பான எதிர்காலம் நிச்சயமாகும்க.

வாகனத்துல செல்லும்போது கவனச் சிதறல் கூடாதுங்க. சின்னச் சின்ன பழுதாக இருந்தாலும் உடனுக்குடன் சரி செய்துடறது நல்லதுங்க.
தினமும் சிறிதுநேரமாவது உடற்பயிற்சிகளைச் செய்யறது நல்லதுங்க. அஜீரணம், அலர்ஜி, தூக்கமின்மை, கழுத்து சுளுக்கு, பல்வலி உபாதைகள் வரலாம்க. 

இந்த வருஷம் முழுக்க இஷ்ட அம்மனைக் கும்பிடுங்க. எண்ணங்கள் ஈடேறும்.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow